குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை
.குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்தல் அல்லது குழந்தைகளை காட்டி பிச்சை எடுத்தல், பிச்சை எடுப்பதற்காக குழந்தைகளை பாடவைத்தல், ஆடவைத்தல், ஜோதிடம் கூற வைத்தல், வித்தை காட்ட வைத்தல் போன்ற அனைத்து செயல்களையும் செய்ய வைப்பது பிரிவு 363A இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் குற்றமாகும் என்பது குறித்து மதுரை மாநகர் முழுவதும் பொதுமக்களிடையே காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் இக்குற்றத்தை யார் புரிந்தாலும் அவர்கள் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தும் வருகின்றனர்.
