ஆண்டிபட்டியருகே பாலியல் தொந்தரவு கொடுத்த 16 வயது சிறுவன் கைது
ஆண்டிபட்டியருகே இரண்டாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 16 வயது சிறுவன் கைது
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியருகே உள்ள ஏத்தகோவில் கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி இரண்டாம் வகுப்பு படித்து வரும் இச் சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் பாலியியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதை சிறுமி அவரது பெற்றோரிடம் கூறியதையடுத்து பெற்றோர் ஆண்டிபட்டி அனைத்து மகளீர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து 16 வயது சிறுவனை கைது செய்த அனைத்து மகளீர் காவல்நிலைய போலீசார் சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் ஆண்டிபட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
