திருச்சி
தற்கொலைக்கு முயன்றதாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமைச் சேர்ந்த வெளிநாட்டுக் கைதிகள் நேற்று மருத்துவமனை வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மத்திய சிறையில் இலங்கை, வங்கதேசம், பல் கேரியா, சீனா உள்ளிட்ட நாடு களைச் சேர்ந்த 72 பேர் அடைக் கப்பட்டுள்ளனர். இவர்களில், 70 பேர் கடந்த 7-ம் தேதி உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுதலை செய்ய வலியுறுத்தல்
தண்டனை காலத்தைத் தாண்டி ஆண்டுக்கணக்கில் சட்ட விரோதமாக தங்களை அடைத்து வைத்திருப்பதாகக் கூறியும், பிணை கிடைத்தாலும் வெளியே விட மறுப்பதாகக் கூறியும், தங் களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத் தினர்.
பின்னர், நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் தற்கொலைக்கு முயன்றதை அடுத்து, அவர்கள் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர்.
இந்நிலையில், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த வெளிநாட்டுக் கைதிகள் நேற்று சிறப்பு முகாமுக்கு புறப்பட்டனர். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அவர்கள், திடீ ரென நுழைவுவாயிலில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட் டனர். அப்போது, முகாமில் இருந்து விடுதலை செய்யும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். சுமார் 15 நிமிடங்கள் போராட்டம் நடத்திவிட்டு போலீஸ் வேனில் ஏறி சிறப்பு முகாமுக்குச் சென்றனர்.
அங்கு சென்று மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்ததால், திருச்சி கோட்டாட்சியர், அகதி களுக்கான தனித் துறை ஆட்சி யர், க்யூ பிரிவு டிஎஸ்பி ஆகி யோர் போராட்டத்தைக் கைவிடு மாறு பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் தொடர்பாக 45 நாட்களில் நடவடிக்கை எடுக் கப்படும் என போலீஸார் தெரிவித் ததை அடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.