சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவுபடி அடையாறு மாவட்ட காவல்துறை துணை ஆணையாளர் திரு.விக்ரமன் அவர்கள் CCTV மற்றும் சைபர் கிரைம் பிரிவு மூலம் திருட்டு செல்போன் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் செல்போன் திருட்டு குற்றங்களை முற்றிலும் தடுக்குமாறு காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டுள்ளார். உத்தரவின் பேரிலும் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையாளர் தெற்கு திரு கண்ணன் இ கா ப அவர்கள் மற்றும் தெற்கு மண்டல இணை ஆணையாளர் திரு நரேந்திரன் நாயர் இ.கா.ப அவர்கள் ஆலோசனைகளின் பேரிலும் அடையாறு மாவட்டம் துணை ஆணையாளர் திரு. விக்ரமன் இ கா ப அவர்கள் அடையாறு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்களின் பயன்பாடுகளை அதிகரித்தும் மேலும் சைபர் கிரைம் பிரிவு மூலம் காணாமல் போன செல்போன்கள் கண்டறிந்து அதன்மூலம் குற்றவாளிகளை கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் கடந்த 21 6 2021 ம் தேதி சைதாப்பேட்டை ரெட்டி குப்பம் பகுதியில் திரு கார்த்திகேயன் வயது 34 என்பவர் வீட்டின் வெளியே நின்று போன் பேசி கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் செல்போனை பறித்து சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதை அடுத்து காணாமல் போன செல்போன் எண்களை அடையாறு சைபர் கிரைம் பிரிவினர் உதவியுடன் ஆராய்ந்தபோது செல்போன் பறித்துச் சென்ற நபர்கள் மேற்கு சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த நான்கு இளம் சிறார்கள் என்பது தெரியவந்தது. அவர்களை துணை ஆணையாளர் அவர்களின் தனிப்படையினரான சைபர் கிரைம் பிரிவு உதவி ஆய்வாளர் திரு .பாலாஜி தலைமை காவலர்கள் திரு .ஜானி விஜய் திரு .கிரி முதல் நிலை காவலர்கள் திரு .சண்முகம் மற்றும் திரு. லோகநாதன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் மூலம் விசாரணை செய்ததில் இருந்து நால்வரும் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்று செல்போன் பதிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர்களிடமிருந்த ஏழு ஸ்மார்ட்போன்கள் மற்றுமொரு பட்டன் செல் போன் கைப்பற்றப்பட்டது. மேலும் செல்போன் பறிப்புக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. இதர செல்போன்களின் உரிமையாளர்கள் கண்டறிய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இளம் சிறார்கள் நால்வரும் குழந்தைகள் நல அலுவலர்கள் உதவியுடன் இளம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
செல்போன் வழி பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ததோடு மேலும் திருடப்பட்ட செல்போன் உட்பட 8 திருட்டு செல்போன்கள் பறிமுதல் செய்த அடையாறு சைபர் க்ரைம் பிரிவு மற்றும் துணை ஆணையாளர் அவர்களின் தனிப்படை காவல் ஆணையாளர் அவர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.
