
மதுரை செல்லூர், கீழவைத்தியநாதபுரத்தில் விபச்சாரம், விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்து செல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
மதுரை, மாநகர் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் திரு. திருப்பதி 2908, இவர் பணி புரியும் பிரிவானது, மதுரை மாநகர் பகுதியில் விபச்சாரம் நடக்காமல் தடுக்கும் பணி செய்து வருவதாகும். இவருக்கு கடந்த 26 ம் தேதி கிடைத்த விபச்சாரம் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலை, தனது மேல் அதிகாரியான அந்த பிரிவு ஆய்வாளருக்கு தெரிவித்து அவரது அனுமதி பெற்று, ஒரு குறிப்பிட்ட செல் நம்பருக்கு போன் செய்தார் எதிர் முனையில் பேசியவர் தன் பெயர் தனம் என்றும் செல்லூர், கீழ வைத்திய நாதபுரம், பனைமேட்டுத் தெருவிற்கு வந்தால் நல்ல அழகான பெண்கள் இருப்பதாகவும் அவர்களுடன் உல்லாசமாக இருப்பதற்கு 2000/− ரூபாய்தான் எனவும் கூறியுள்ளார், இதனை தொடர்ந்து அவர் சொன்ன விலாசத்திற்கு நேரில் சென்ற போது அங்கிருந்த, ஒரு பெண் தன்னை தனம் என்று அறிமுகம் செய்து கொண்டு, அங்கிருந்த செல்வி என்ற பெண்ணைக் காட்டி திருப்பதியிடமிருந்து 2000 ரூயாயை பெற்றுக்கொண்டு ஒரு காண்டம் பாக்கெட்டை கையில் கொடுத்து இருவரையும் ஒரு அறையின் உள்ளே அனுப்பியுள்ளார், உள்ளே சென்ற திருப்பதி அந்த பெண் செல்வியிடம் நடத்திய விசாரணையில் வீட்டு வேலைக்கு என்று அழைத்து வந்து தன்னை தன் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருவதாகவும், தன்னை காப்பாற்றும்படியும் கேட்டுக்கொண்டார், உடனே திருப்பதி தனது மேல் அதிகாரியான அந்த பிரிவு ஆய்வாளருக்கு போன் செய்து ஆய்வாளர் மற்றும் அந்த பிரிவு ஆளினர்களை வரவழைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தனம் என்ற பெண்ணை கைது செய்து, பாதிக்கப்பட்ட செல்வி என்ற பெண்ணை மீட்டனர். அதன்பின் செல்லூர் D2, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர் இதில் பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது, மதுரை, செல்லூர், பனைமேட்டு தெருவை சேர்ந்த முத்துமணித் தேவர் மனைவி, தனம் என்ற தனலெட்சுமி வயது 49/21 என தெரிய வந்தது, அவர் மீது ஆய்வாளர் திரு. மாடசாமி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திருமதி. லெட்சுமி அவர்கள் வழக்குப் பதிவு செய்து, இது கொரோனா காலமாதலால் அவரை தக்க பிணையில் விடிவித்தார்கள்.
