
மதுரை, தனக்கன்குளம் பகுதியில் கஞ்சா விற்ற மூதாட்டியை கைது செய்த திருநகர் போலீசார்
மதுரை, திருநகர், W1, காவல் நிலையம், கடந்த 29 ம் தேதி, நிலைய ஆய்வாளர் அனுஷா மனோகரி அவர்களின் உத்தரவின்படி சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக சார்பு ஆய்வாளர் திரு. ராஜ்குமார் மற்றும் முதல் நிலை காவலர் சக்திகுமார், சதீஷ்ராஜா ஆகியோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனக்கன்குளம், நேதாஜி நகர் பஸ் ஸ்டாப் அருகில் சந்தேகப்படும்படியாக ஒரு மூதாட்டி நின்றிருந்தார் அவர் போலீசாரை பார்த்தவுடன் நைசாக நழுவப்பார்த்தார், சுதாரித்து கொண்ட போலீசார் அவரை பிடித்து சோதனை செய்த போது அவரிடம் 50 கிராம் எடை கொண்ட கஞ்சா வைத்திருந்தார். அவரை பிடித்து நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது அவர் மதுரை தனக்கன்குளம் நேதாஜி நகரை சேர்ந்த அம்மாசியின் மனைவி வள்ளி வயது 65, என தெரியவந்தது. அவர் கஞ்சா விற்ற குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவரை கைது செய்து சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்.
