பணியின் போது உயிர்நீத்த மூன்று காவலர்கள் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிவாரண நிதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்
தென்காசி மாவட்டம், காவல்துறையில் இணைந்து காவல் பணியின்போது மரணமடைந்த காவல் ஆளிநர்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண தொகை வழங்கப்பட்டது. இதில் செங்கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்த *சிறப்பு சார்பு ஆய்வாளர் தெய்வத்திரு. ஸ்ரீராம்,சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த *முதல் நிலை காவலர் தெய்வத்திரு. மாரியப்பன்* மற்றும் தென்காசி நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணிபுரிந்து சிறப்பு சார்பு ஆய்வாளர் தெய்வத்திரு. நடராஜன் ஆகிய மூன்று நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 3,00,000/- க்கான காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்கள் வழங்கினார். பின்பு இதுகுறித்து அவர் கூறுகையில் காவல்துறை எப்போதும் தங்கள் குடும்பத்திற்கு துணை நிற்கும் என்று ஆறுதல் வழங்கினார்.
