கொரோனா 3 வது அலை இந்த மாதம் தொடங்கும்
அக்டோபர் மாதத்தில் கொரோனா உச்சம் தொடும் மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரிக்கை
கொரோனா பாதிப்பில் இந்தியா 2 வது இடத்திலும், உயிரிழப்பில் 3 வது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் 3.2 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.உயிரிழப்பு 4.25 லட்சத்தை தாண்டி விட்டது. ஜூலை மாத இறுதியிலேயே கொரோனா பாதிப்பு இந்தியாவில் படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் சரியாக கடைப்பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
கேரளா, மகாராஷ்ரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனாவின் உக்ரம் சற்றும் குறையவில்லை. ஐதராபாத் ஐ.ஐ.டி., சேர்ந்த பேராசிரியர் மதுகுமல்லி வித்தியாசாகர், கான்பூரை சேர்ந்த மனிந்திர அகர்வால் உள்ளிட்ட மருத்துவ ஆய்வாளர்கள் அன்மையில் நடத்திய ஆராய்ச்சியில் பல முக்கிய அம்சங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர். ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ள பிரதான அம்சங்கள், படிப்படியாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு ஜூலை 26 ல் தொடங்கி ஆகஸ்ட்டு 1 ல் முடிந்த வாரத்தில் குறிப்பிட்டு சொல்லத் தக்க வகையில் அதிகரித்து வந்துள்ளது.11 வாரங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 7.5 சதவீதம் உயர்துள்ளது. முந்தய வாரத்தில் கொரோனா பாதிப்பு 2.66 லட்சம் மட்டுமே, ஆனால் நேற்றுடன் முடிந்த வாரத்தில் கொரோனா பாதிப்பு 2.86 லட்சம் ஆகும்.
நேற்றுடன் முடிவடைந்த வாரத்தில் கேரளாவில் மட்டும் கேரளாவில் மட்டும் 1.4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த பாதிப்பு முந்தய வாரத்தோடு ஒப்பிடும்போது 26.5 சதவீதம் அதிகம். இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் 49 சதவீதம் கேரளாவில் ஏற்பட்டுள்ளது. அங்கு தினந்தோறும் 20,000 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.கொரோனா 3 வது அலை இந்த வாரமே தொடங்கி விடும். இது தொடரந்து சில மாதங்கள் நீடிக்க வாய்புள்ளது.
அக்டோபர் மாதத்தில் கொரோனா 3 அலை உச்சம் பெறும் இந்தியாவில் தினசரி ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்புள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையீல் அசிரத்தையாக இருந்தால் பாதிப்பு 1.5 லட்சம் ஆகலாம். இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
