
தூத்துக்குடி மாவட்டம்,விளாத்திகுளம் போலீஸ் கபடி அணி அபாரம்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் முயற்சியில் விளாத்திகுளம் உட்கோட்ட “போலீஸ் கபடி அணி” பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும், பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் நல்லுறவை மேம்படுத்தும் பொருட்டு உருவாக்கப்பட்டிருந்தது.
விளாத்திகுளம் உட்கோட்ட “போலீஸ் கபடி அணியை கோவில் கொடை விழாக்களில் பங்கேற்க செய்தார்கள். அதன் விளைவாக கடந்த 31.7.21 எட்டயபுரம் காவல் நிலைய எல்லையில் உள்ள கீழநம்பிபுரம் கிராமத்தில் நடைபெற்ற மூவேந்தர் கபாடி குழு மற்றும் ஒருகூட்டு பறவைகள் கபாடி குழு நடத்திய மாபெரும் கபாடி போட்டியில் விளாத்திகுளம் உட்கோட்ட “போலீஸ் கபடி அணி” பங்கேற்று சிறப்பாக விளையாடி 5ம் பரிசு மற்றும் கோப்பை வென்றுள்ளார்கள்.
விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் வெற்றி பெற்ற காவல் துறை வீரர்களை வெகுவாக பாராட்டினார். மேலும் காவல் துறை பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தவும் வலியுறுத்தினார்
