மதுரை, S.S காலனி C3, காவல்நிலைய காவல் ஆய்வாளர் அவர்கள், மற்றும் வியாபாரிகள் பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம்
மதுரை மாநகர் S.S காலனி C3, காவல்நிலையம் காவல் ஆய்வாளர் திரு.பூமிநாதன் அவர்கள் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து வியாபாரிகள், கடைக்காரர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரையும் நேற்று காவல்நிலையம் அழைத்து அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று பற்றியும் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு சம்பந்தமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தற்போது கொரோனா 3 வது அலை அதி தீவிரமடைந்து வருவதால் அதிலிருந்து நாம் நம்மை காப்பாற்றிக் கொள்ள அரசு விதித்துள்ள கொரோனா நோய் தடுப்பு விதி முறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை முகக் கவசம் அணிந்து வர வற்புறுத் வேண்டும் கடைக்கு வருபவர்களுக்கு சானிடைசர் வழங்க வேண்டும் உடல் வெப்பம் பரிசோதிக்க வேண்டும் ஆடி மாதங்களில் மக்கள் கூட்டமாக வர வாய்புள்ளது, அதனால் அவர்களை சமூக இடைவெளியை கடைபிடிக்க செய்ய வேண்டும் கடைகளுக்குள் மொத்தமாக வாடிக்கையாளர்களை அனுமதித்து கூட்டம் சேரக்காமல் ஒவ்வொரு வாடிக்கையாளராக வியாபாரம் முடித்து வெளியே அனுப்பி சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறித்தினார். மேலும் அவர் கூறுகையில் சமூக விரோதிகளால் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனே அவரை அனுகும்படி கூறி அவரது தொலை பேசி எண்ணை அவர்களுக்கு வழங்கினார். இவர் முதலில் மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் பணி புரிந்த போது ரவுடிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.