
20 ஆயிரம் மதிப்புள்ள மோட்டாரை திருடிய நபர் கைது.
கடந்த 3 ம் தேதி, திருநெல்வேலி சீதபற்பநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெட்டுவான்குளம், ஆதாம் நகர் அருகே, பாலாஜி புரோமாட்டார்ஸ் புராஜெக்ட் வொர்க் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் சூப்பர் வைசராக வி.கே.புரத்தைச் சேர்ந்த ரூபன் வயது, 34 ,வேலை பார்த்து வருகிறார். கொரோனா தொற்று காரணமாக பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, மீண்டும் பணியை தொடங்க ரூபன் நேற்று காலை கட்டட வேலையை ஆரம்பிக்கும் போது மோட்டார் திருடு போயிருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ரூபன் சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், உதவி ஆய்வாளர் திரு. வின்சென்ட் அவர்கள் விசாரணை மேற்கொண்டு மோட்டாரை திருடிய வேளாளர்குளத்தை சேர்ந்த மிக்கேல் அருளப்பன் வயது 32, என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் திருடப்பட்ட மோட்டாரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
