

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே இலவச வீட்டு மனை பட்டா கேட்டு 2 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருநங்கைகள்
நெல்லை மாவட்டம் வள்ளியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர், ராதாபுரம் வட்டாட்சியர் ஆகியோரிடம் மனு அளித்தும் இதுவரை இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இன்று வள்ளியூர் அருகே காமராஜ் நகர் பகுதியில் முதல் அமைச்சர் அவர்களின் உங்கள் தொகுதியில் முதல்வர், சிறப்பு திட்டத்தின் கீழ் 150 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த இடத்தில் திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா தருவதாக கூறியிருந்தனர், ஆனால் அவ்வாறு வழங்காமல் மற்ற நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளனர். ஆகவே வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி 20 திருநங்கைகள் காமராஜர் நகர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சேரன்மகாதேவி சப்-கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி அவர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார், .பேச்சு வார்த்தையில் வள்ளியூர்
ஹவுசிங் போர்டு அருகில் திருநங்கைகளுக்கு 2 சென்ட்டில் ஒரு வாரத்தில் பட்டா வழங்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு விட்டு கலந்து சென்றனர்.
