


மதுரை, S.S.காலனி காவல்நிலைய எல்லைக்குடபட்ட பகுதியில், குற்றத்தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன
மதுரை மாநகர் S.S.காலனி C 3, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் முன் கூட்டியே தடுப்பதற்காகவும், குற்ற்செயலில் ஈடுபடுவோரை கண்காணிக்கவும் TVS நிறுவனம் சார்பாக சம்மட்டிபுரம் பகுதியில் 11 கேமராக்களும், HMS காலனி பகுதியில் 19 கேமராக்களும், பொருத்தப்பட்டு அவற்றை கண்காணிப்பதற்காக மதுரை TVS ரப்பர் கம்பெனி அருகில் உள்ள புறக்காவல் நிலையத்தில் CCTV கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி CCTV கண்காணிப்பு மையத்தை கடந்த 4 ம் தேதி மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் திறந்து வைத்தார்கள், திலகர் திடல் உதவி ஆணையர் திரு. ரமேஷ் அவர்கள் மற்றும் C3, காவல்நிலைய ஆய்வாளர் திரு. பூமிநாதன் ஆகியோர் உடனிருந்தார்கள்.
