
விளாத்திகுளத்தில் பரிசளிப்பு விழா
கொரோனா 3ம் அலை பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு வாரமாக அறிவித்துள்ளது.
அதன்படி இன்று (7.8.21) தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக விளாத்திகுளத்தில் கொரோனா நோய் பரவல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பொதுமக்களிடம் கொரோனா பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி குழந்தைகளுக்கு ஓவியம், கட்டுரை மற்றும் கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற பள்ளி குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. ஜிவி. மார்க்கண்டேயன், வியாபாரிகள் சங்க பொருளாளர் மாரியப்பன், வர்த்தக சங்க பொருளாளர் மேடை சேர்மன் உட்பட விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் கலா, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆல்பின் பிரஜிட் மேரி, எட்டையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர்முகம்மது, விளாத்திகுளம் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் ஆல்வின் ஜோஸ், உதவி ஆய்வாளர்கள் காசிலிங்கம், சரவணன், முத்துமாரி உள்ளிட்ட காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
