
போலி கனிமவள சான்று தயாரித்து கேரளாவிற்கு கருங்கல் கடத்திய லாரி ஓட்டுனர் கைது. லாரி பறிமுதல்
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு சோதனைசாவடியில் ராதாபுரம் தலைமையிடத்து மண்டல துணை வட்டாட்சியர் பேட்ரிக் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கேரளா நோக்கி சென்று கொண்டு இருந்த லாரியை மறித்து சோதனை செய்ததில் ராதாபுரம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு கருங்கல் எடுத்து செல்லப்பட்டது தெரியவந்தது. மேலும் இந்த கனிம வளம் கொண்டு செல்வதற்கு சான்று தேவை, லாரி ஓட்டுனரிடம் விசாரணை செய்து ஆவணத்தை பார்த்தபோது கனிமவள அதிகாரிகள் வழங்கியது போல் போலியான பாஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது . இதுகுறித்து தலைமையிடத்து மண்டல துணை வட்டாட்சியர் பேட்ரிக் பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரினை தொடர்ந்து பணகுடி காவல் ஆய்வாளர் சகாயசாந்தி கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் ஷானாவாஸ் மீது வழக்கு பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தார்,.
