
கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேயுள்ள எட்டிமரத்துப்பட்டி பகுதியை சேந்தவர் நரசிம்மன்(55) விவசாயி. இதே பகுதியில் இருந்து கொண்டு 15 ஏக்கர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இந்நிலையில் நேற்று 3 ம் தேதி மதியம் 2 மணியளிவில் மது அருந்து விட்டு நடந்து வந்துள்ளார்.
அப்போது நிலைமடுமாறி அருகில் இருந்த கிணற்றில் விழுந்தார். இதனை கண்ட அவரது மனைவி ராணி உறவினர்களுக்கு தகவல் அளித்தார். அவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரி வித்தனர். அவர்கள் விரைந்து கிணற்றில் தேடி இறந்த நிலையில் இருந்த நரசிம்மனை மீட்டனர். இது குறித்து ராணி அளித்த புகாரின் பேரில் ஏரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
