காவல் துறையினருக்கு தூத்துக்குடி எஸ்.பி. பாராட்டு
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலைய பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கலியாவூரை சேர்ந்த பெருமாள் (60) என்பவரை கைது செய்த முறப்பநாடு காவல் ஆய்வாளர் பாஸ்கரன், தலைமை காவலர் சுந்தர்ராஜ், முதல்நிலை காவலர்கள் சதீஷ் தணிகை ராஜா, சுரேஷ்குமார் ஆகியோருக்கும்,
கடந்த 3.8.21 அன்று ஏரல் காவல் நிலைய பகுதியில் தங்க நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வழக்கில் தனிப்படை அமைத்து 24 மணி நேரத்தில் எதிரியை கைது செய்த ஏரல் காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதா, எஸ்.ஐ. சண்முகசுந்தரம், எஸ்.எஸ்.ஐ.க்கள் ஜேம்ஸ், மணி, முதல்நிலை காவலர் சந்தனமாரி, காவலர்கள் மாரியப்பன், பலவேசபார்த்திபன் ஆகியோருக்கும்,
கோவில்பட்டி கழுகுமலை காவல் நிலைய பகுதியில் தொடர் திருட்டு வழக்கில் எதிரியை கைது செய்து, அவரிடமிருந்து 64 சவரன் தங்கம், 4 இரு ச்சக்கர வாகனங்கள் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவற்றை கைப்பற்றிய கோவில்பட்டி மேற்கு காவல் ஆய்வாளர் சபாபதி, நாலாட்டின்புதூர் காவல் ஆய்வாளர் பத்மாவதி, கோவில்பட்டி கிழக்கு காவல் எஸ்.ஐ. மாதவராஜா, எஸ்.எஸ்.ஐ. நாராயணசாமி, கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் முருகன், மேற்கு காவல் தலைமைக் காவலர் ரெங்காலெட்சுமி, கொப்பம்பட்டி காவல் முதல்நிலைக் காவலர் ஸ்ரீராம் ஆகியோருக்கும்,
கடந்த 1.8.21 அன்று புளியம்பட்டி காவல் நிலைய பகுதியில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் 5 பேர் ஒரு சிறுமியை கடத்தி வந்ததை பார்த்து அவர்களை மடக்கி பிடித்த கயத்தார் காவல் ஆய்வாளர் முத்து, எஸ்.ஐ. அரிக்கண்ணன், முதல்நிலை காவலர் மோகன்ராஜ், காவலர் பாலமுருகன் ஆகியோருக்கும், தூத்துக்குடி அழகர் ஜங்ஷனில் போக்குவரத்து பணியிலிருந்த போது, குடிபோதையில் காரை ஒட்டி வந்தவரை தடுத்து நிறுத்திய மத்தியபாகம் போக்குவரத்து தலைமை காவலர் செல்வராஜின் பணிக்காகவும், காவல் துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல் துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி, தலைமையிடத்து காவல் துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்கள் கணேஷ்குமார், பவித்ரா, ஷாமளாதேவி மற்றும் மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.
