
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை தனிப்பிரிவிற்கு வந்த இரகசிய தகவலின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்பேரில் சார்பு-ஆய்வாளர் திரு.செந்தில்குமார் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. உளவுத்துறையின் உதவியோடு, தனிப்படை சந்தேகப்படும் நபர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வந்தது. மேலும் கூடுதலாக மாவட்ட காவல்துறை அறிமுகப்படுத்திய பிரத்யேக கைபேசி எண் 9489919722-ல் பல தகவல்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. அதன் அடிப்படையில் 11.11.2019-ம் தேதி சார்பு ஆய்வாளர் திரு.செந்தில்குமார் தலைமையில் தனிப்படை போலீஸார் மண்டபம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கடற்கரை பகுதியில் ஆங்காங்கே மறைமுகமாக கண்காணித்து வந்தனர். அப்போது, தகவலாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மண்டபம் கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த நபரை, மண்டபம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில், அவரிடம் 201 ஐநூறு ரூபாய் கள்ளநோட்டுகள் இருந்தது தெரிய வந்தது. மேற்படி சந்தேக நபரின் முகவரி குறித்து விசாரிக்க, முரளிதரன் (எ) அருண் (24), த/பெ சித்திரை குமார், அவினாசி அகதிகள் முகாம், திருப்பூர் மாவட்டம் என தெரிய வந்தது. மேற்படி நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கள்ளநோட்டுகள், திருப்பூர் மாவட்டத்தில் அச்சடிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.
இது தொடர்பாக, முரளிதரன் (எ) அருண் என்பவரை ஆய்வாளர் திருமதி.மாய ராஜலெட்சுமி அவர்கள் மண்டபம் காவல் நிலைய குற்ற எண் 187/19 u/s 489(C)(E) IPC-ன் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்