.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பேரையூர் கிராமத்தின் அருகில் உள்ளது கருங்குளம் கிராமம். இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வரும் மாணவர் ஒருவரின் தந்தை, உடல்நலக் குறைவால் சமீபத்தில் உயிரிழந்தார்.
சிறுவன் வடிவேலனுக்குப் பாராட்டு
தன் தந்தையின் பிரிவினைத் தாங்கிக்கொள்ள முடியாத சோகத்துடன் திங்கள்கிழமை காலை பள்ளிக்கு வந்துள்ளார் மாணவர்.
வகுப்பறைக்கு வந்த பின்னரும் தனது தந்தையை நினைத்தபடியே சோகத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவர் பள்ளியில் உள்ள மரம் ஒன்றில் தூக்குமாட்டி தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதை அப்பள்ளியில் படிக்கும் அதே ஊரைச் சேர்ந்த சக வகுப்புத் தோழனான வடிவேலன் என்ற மாணவர் பார்த்துள்ளார்.
தோழன் உயிரைக் காப்பாற்றிய வடிவேலனைப் பாராட்டும் எஸ்.பி.
உடனே மரத்தின் அருகே ஓடிச் சென்ற மாணவர் வடிவேலன், தூக்கில் தொங்கிய தனது நண்பனை தன் தோள்களில் தூக்கியபடி அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்து கூச்சல் போட்டுள்ளார்.
வடிவேலனின் கூச்சலைக் கேட்டு ஓடிவந்தவர்கள் தூக்கில் தொங்கிய அந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தோழன் உயிரைக் காப்பாற்றிய சிறுவன் வடிவேலன்
இந்தத் தகவலை அறிந்த ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அவர்கள் மாணவனைத் தனது சாதுர்யமான நடவடிக்கையின் மூலம் காப்பாற்றிய வடிவேலனை தனது அலுவலகத்திற்கு அழைத்து வரச் செய்தார். பெற்றோருடன் அங்கு வந்த மாணவன் வடிவேலனைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் புத்தகம் ஆகியவற்றை வழங்கினார்
ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்.