
நடைபெற்ற அதிரடி வாகன சோதனை.. வசமாக சிக்கிய நபர்.. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!!
நடைபெற்ற அதிரடி வாகன சோதனை.. வசமாக சிக்கிய நபர்.. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!!
சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்த முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் குற்றப்பிரிவு காவல்துறையினர் காஞ்சிராங்குளம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் ஒன்று வந்துள்ளது. அப்போது சரக்கு வேனில் வந்த ஓட்டுனர் காவல்துறையினரை பார்த்தயுடன் நடுரோட்டிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் ஓட்டுனருடன் வந்த மற்றொரு நபரை மடக்கி பிடித்து சரக்கு வேனை சோதனை செய்துள்ளனர்.
அந்த சோதனையில் வேனில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பிடிபட்ட நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் திட்டக்குடி பகுதியில் வசித்து வரும் ரவிச்சந்திரன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வேப்பூர் மற்றும் அதனை சுற்றி உள்ள
கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கியதும், அதனை கோழி தீவனத்திற்காக வேப்பூரிலிருந்து சேலம் மாவட்டத்திலுள்ள தலை வாசல் பகுதிக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாது தப்பி ஓடிய ஓட்டுனர் அப்பகுதியில் வசித்து வரும் சிலம்பரசன் என்பது விசாரணையின்போது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரவிச்சந்திரனை கைது செய்ததோடு அரிசியை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடிய சரக்கு வேன் ஓட்டுனர் சிலம்பரசனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
