
முன்விரோதம் காரணமாக அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது.
முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தருவை பகுதியைச் சேர்ந்த பராசக்திவயது 24 என்பவரிடம் அதே பகுதியை சேர்ந்த குமார் என்ற ராஜேஸ்வரன் வயது 26 என்பவரின் சித்தப்பா மகன் உத்திரமூர்த்தி என்பவர் பிரச்சனை செய்துள்ளார். அதனால் பராசக்தி முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உத்திரமூர்த்தியை காவல்துறையினர் கைது செய்து உத்திரமூர்த்தி தற்போது சிறையில் இருந்து வருகிறார். 19.08.2021 அன்று பராசக்தி அவரது வீட்டின் முன்பு நடந்து வந்து கொண்டிருந்தபோது குமார் என்ற ராஜேஷ்வரன் பராசக்தியை வழிமறித்து உத்திரமூர்த்தி சிறையில் இருப்பதற்கு நீ தான் காரணம் என்று கூறி அவதூறாக பேசி அரிவாளால் தாக்கும் போது பராசக்தி சுதாரித்துக்கொண்டு விலகியுள்ளார். பின்னர் பராசக்தி சத்தம் போடவும் அருகிலிருந்தவர்கள் வரவும், ராஜேஷ்வரன் பராசக்தியை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து பராசக்தி, முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில், புகார் அளித்ததன் அடிப்படையில் முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் திரு. சண்முகசுந்தரம் அவர்கள் விசாரணை மேற்கொண்டு பராசக்தியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த குமார் என்ற ராஜேஸ்வரனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
