
முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கி கொலை செய்த இரண்டு நபர்கள் கைது.
கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ ஏர்மாள்புரம், தோப்பு தெருவைச் சேர்ந்த துரைபாண்டி வயது 48 என்பவர் சுமார் ஆறு வருடத்திற்கு முன்பு வாழைக்கன்று பிடுங்கி நட்டதில் அதே பகுதியைச் சேர்ந்த சிவசங்கர பெருமாள் @ பேச்சி வயது 65 என்பவர்க்கும் பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனை மனதில் வைத்துக்கொண்டு கீழ ஏர்மாள்புரத்தில் துரைபாண்டி அவரது மனைவியுடன் இன்று காலை வழக்கம் போல் மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தபோது சிவசங்கர பெருமாள் @ பேச்சி, அவரது மகன் சட்டநாதன் வயது 32 ஆகிய இருவரும் துரைப்பாண்டியிடம் அவதூறாக பேசியும், சிவசங்கரபெருமாள் துரைப்பாண்டியின் காலை இழுத்து கீழே தள்ளிவிட்டு இரு கைகளை பிடித்தும், சட்டநாதன், அருகிலிருந்த கல்லால் துரைபாண்டியை கடுமையாக தாக்கி இரு கண்களையும், சேதப்படுத்தி மீண்டும் அதே கல்லால் மூக்கு,தலை, வாயிலும் தாக்கி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் திருமதி. ராஜகுமாரி அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, துரைபாண்டியை கொலை செய்த சட்டநாதன் மற்றும் சிவசங்கர பெருமாள் என்ற பேச்சி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
