
மதுரை மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை, காளவாசல், பைபாஸ், சாலைகளின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
மதுரை காளவாசல், பைபாஸ் ரோடு இரு புறங்களிலும் சாலையோர கடைகள் ஆக்கிரமித்து இருந்தன நாளுக்கு நாள் இதன் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது இதனால் பைபாஸ் சாலை முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் சூழல் உருவானது. ஆக்கிரமிப்புகள் குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார்கள் வந்தன. இந்த நிலையில் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா அவர்களின் உத்தரவின் பெயரில் காளவாசல் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இதன்படி காளவாசல் சிக்னல் முதல் பழங்காநத்தம் பாலம் வரை சாலையின் இருபுறங்கள் மற்றும் சர்வீஸ் சாலைகளில் 100 க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் அகற்றப்பட்டன. இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனை அடுத்து போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் ஜே.சி.பி., எந்திரங்கள் மூலமாக அகற்றப்பட்டது
மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலை, நேரு நகர் பாலம் அருகே அரசு இடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த செங்கல், மணல், ஜல்லி ஆகியவைகளை போக்குவரத்து காவல் உதவி ஆணையர் இளமாறன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி துணை ஆய்வாளர் சந்தானகுமார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்னிலையில் அப்புறப்படுத்தப்பட்டது
ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர் மேலும் அந்தப் பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்பு நடக்காமல் இருக்க உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
