பேஸ் புக் கடன் சலுகை விளம்பரத்தின் மூலம் கடன் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியவர்கள் கைது
மதுரையில். கடந்த, 04.08.2021 செக்காணூரணியைச் சேர்ந்த குமரேஷ் என்பவரின் புகாரில் அவரை பேஸ்புக் கடன் சலுகை விளம்பரம் மூலம் தன்னை அறியாத சிலர் ஏமாற்றியதாகவும், அதை நம்பி அவர் ரூ. 51,300/- ஐ ஃபோன்பே மூலம் அனுப்பியதாகவும், ஆனால் வாக்குறுதியளிக்கப்பட்ட படி கடன் தொகையை வழங்காமல் தன்னை ஏமாற்றி விட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் மதுரை மாவட்ட சைபர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளை கண்டுபிடித்து கைது செய்ய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V. பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின் படி மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி அவர்களின் மேற்பார்வையின் கீழ், சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் சைபர் கிரைம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, சிடிஆர் பகுப்பாய்வு மற்றும் வங்கி பரிவர்த்தனை பகுப்பாய்வு மூலம் குற்றவாளிகளை கண்டுபிடிக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட A1 பிரசாந்த்குமார் சிவகங்கை சாலை, மேலூர் மற்றும் A2 சரவணன், காந்திநகர், மேலூர் ஆகியோர் கடந்த 20.08.2021 அன்று, கைது செய்யப்பட்டு உசிலம்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், A1 பிரசாந்த்குமாரிடமிருந்து ரூ 29,300/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அன்று, செக்காணூரணியைச் சேர்ந்த குமரேஷ் என்பவரின் புகாரில் அவரை பேஸ்புக் கடன் சலுகை விளம்பரம் மூலம் தன்னை அறியாத சிலர் ஏமாற்றியதாகவும், அதை நம்பி அவர் ரூ. 51,300/- ஐ, ஃபோன்பே மூலம் அனுப்பியதாகவும், ஆனால் வாக்குறுதியளிக்கப்பட்ட படி கடன் தொகையை வழங்காமல் தன்னை ஏமாற்றி விட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் மதுரை மாவட்ட சைபர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளை கண்டுபிடித்து கைது செய்ய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V. பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின் படி மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி அவர்களின் மேற்பார்வையின் கீழ், சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் சைபர் கிரைம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, சிடிஆர் பகுப்பாய்வு மற்றும் வங்கி பரிவர்த்தனை பகுப்பாய்வு மூலம் குற்றவாளிகளை கண்டுபிடிக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட A1 பிரசாந்த்குமார் சிவகங்கை சாலை, மேலூர் மற்றும் A2 சரவணன், காந்திநகர், மேலூர் ஆகியோர் கடந்த 20.08.2021 அன்று, கைது செய்யப்பட்டு உசிலம்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், A1 பிரசாந்த்குமாரிடமிருந்து ரூ 29,300/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
