கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய நபர் கைது
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பத்மநேரியைச் சேர்ந்த ரமேஷ் வயது 40, என்பவர் பத்மநேரி கீழ் சாலையில் உள்ளே இசக்கியம்மன் கோவிலில் நாட்டாமையாக இருந்து வருகிறார். இவர் இன்று களக்காடு காவல் நிலையத்தில், கோயில் உண்டியலை உடைத்து மர்ம நபர் 4000 ரூபாய்,பணத்தை திருடி விட்டதாக புகார் அளித்தார். இதன் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட களக்காடு உதவி ஆய்வாளர் திருமதி.தேவி, அவர்கள், கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியது கன்னியாகுமரி மாவட்டம், தாழக்குடி பகுதியைச் சேர்ந்த கோலப்பன் வயது 50 என்பது தெரியவந்தது. மேற்படி உதவி ஆய்வாளர் அவர்கள், கோலப்பனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
