மேலுார் போலீஸ் ஸ்டேஷனை இரண்டாக பிரிக்க ஆய்வு.
மேலுார்-மேலுார் போலீஸ் ஸ்டேஷனில் 45 போலீசார் உள்ளனர். பாதுகாப்பு, நீதிமன்ற பணி உள்ளிட்ட பணிகளுக்கு 35 பேர் செல்வதால் 10 பேர் மட்டுமே வழக்குகளை விசாரிக்க வேண்டியுள்ளது.சமூக ஆர்வலர் ஸ்டாலின் அவர்கள் பிரச்னை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் அதிக துாரத்தில் இருந்து வருவதற்குள் எல்லாம் முடிந்து விடுகிறது.
குற்றவாளிகள் தப்பி விடுகின்றனர். இதனால் பாதிக்கப்படுவது நாங்கள்தான். சட்டம் ஒழுங்கு, குற்றங்களை கட்டுப்படுத்த மேலுார் ஸ்டேஷனை இரண்டாக பிரிக்க வேண்டும்.மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் கூறுகையில் ”மேலுார் ஸ்டேஷன் பகுதிகளை பிரித்து திருவாதவூர் போலீஸ் ஸ்டேஷன் உருவாக்க ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும்” என்றார்.
