
சருகுவலையபட்டியில் அனுமதியில்லாமல் கிராவல் மண் அள்ளி திருடியவர் கைது, டிராக்டர் பறிமுதல்
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.பாஸ்கர் அவர்களின் உத்தரவின்படி , நேற்று காலை கீழவளவு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.பாலமுருகன் மற்றும் சக காவலர்களுடன் சருகுவலையபட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர, அப்போது அங்கு உரிய அனுமதி சீட்டு இல்லாமல் கிராவல் மண் ஏற்றி வந்த டிராக்டரை தடுத்து நிறுத்தி விசாரித்த போது, எதிரி வீரகாளி அம்மன் கோவில் அருகே உள்ள ஓதபிச்சான் கண்மாயில் கிராவல் மண் அள்ளி திருட்டு தனமாக கொண்டு வந்தது தெரிய வந்தது.கிராவல் மண் ஏற்றி வந்த டிராக்டர் மற்றும் டிரைவரும் உரிமையாளருமான சருகுவலையபட்டியை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் சின்னத்துரை வயது 47/21, என்ற எதிரியை காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
