
முதல் பரிசு வென்ற திருச்சி மாநகர கமிஷனர் அருண்
மத்திய மண்டலத்தில் உள்ள காவல்துறை உயரதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி பெரம்பலூர் மாவட்ட துப்பாக்கிச் சுடும் தளத்தில் நடந்தது. இதில், திருச்சி மத்திய மண்டலத்தின் அனைத்து மாவட்டத்திலும் பணிபுரியும் காவல் உயரதிகாரிகளுக்குக் கூடுதல் காவல்துறை இயக்குநர் அமல்ராஜ் தலைமையில் இன்று 21.08.2021-ம் தேதி துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது.
இரண்டு வகையான துப்பாக்கியில் சுடும் போட்டி நடந்தது. பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அருண் (திருச்சி மாநகர ஆணையர்), பிரவேஷ்குமார் (தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர்), ஜவஹர் (நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்).
இன்சாஸ் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் ஜவஹர் (நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்), பிரவேஷ்குமார் (தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர்), விஜயகுமார் (திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்), நிஷா பார்த்திபன் (புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்) ஒட்டுமொத்தமாக (Overall) வெற்றி பெற்றவர்களுக்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் (கமாண்டோ) அமல்ராஜ் வாழ்த்துக்களையும் பரிசுகளையும் வழங்கினார்.
