காரில் போதை பொருள் கடத்தல் இரண்டு பேர் கைது
மதுரையில் காரில் போதை பொருள் கடத்திய இருவரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர் மதுரை அண்ணா நகரில் திரையரங்கு அருகே போலீசார் வெள்ளிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர் தீவிர சோதனைக்கு பிறகு மதுரை மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்த பூபதி மகன் ராம்குமார் வயது 41 வல்ல நாதபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் வினோத் வயது 29 என்பதும் காரில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்களை கடத்தி சென்றது தெரிய வந்தது இது குறித்த புகாரின் பேரில் அண்ணா நகர் போலீசார் வழக்குப் பதிந்து ராம்குமார் வினோத் ஆகிய இருவரையும் கைது செய்தனர் மேலும் அவர்களிடம் இருந்த 76 கிலோ போதை பொருள்கள் கைபேசிகளை பறிமுதல் செய்தனர்