
அடிதடி மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம், வி.கே. புரம், அயன்திருவாலீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த லெட்சுமணன் என்பவரின் மகன் மூக்காண்டி வயது 44 என்பவர் அடிதடி மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் கவனத்திற்கு வந்ததால் எதிரியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வி.கே. புரம், காவல் ஆய்வாளர், திருமதி. சீதாலட்சுமி அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், 25.08.2021 இன்று எதிரி குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
