
சட்டம் சட்டப்பிரிவுகளுக்கு மரியாதை
சாதாரணமாக நீங்கள் செய்வது குற்றம் என்று சொன்னாலும், அது குற்றமே எனத் தெரிந்தாலும் கூட, யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். அதே குற்றம் எனக்கூறும் சட்டத்தின் எண்ணைக் குறிப்பிட்டு சொல்லிப் பாருங்கள். நீதிபதி கூட பயப்படுவார். இதுதான் சட்டப் பிரிவுக்கு உள்ள மதிப்பு.
இதுவரையிலும், விழிப்புணர்வு செய்பவர்கள் எல்லோருமே, சமுதாய விழிப்புணர்வைத்தான் செய்கிறார்களே ஒழிய, சட்ட விழிப்புணர்வைப் பற்றியோ, சட்டத்தை தவறாக கையாள்பவர்களைக் களைஎடுப்பது எப்படி? என்பது பற்றியோ கற்றுத்தரவும் இல்லை. கவலைப்படவும் இல்லை. காரணம், சட்ட விழிப்புணர்வு பெற்று நீங்கள் தெளிவாகிவிட்டால் அவர்கள் காசு சம்பாதிக்க முடியாது!
