
குழந்தையை விற்ற தாய் மற்றும் உடந்தையாக இருந்த நபர் கைது.
திருப்பூர் மாவட்டம், குருவாயூரப்பன் நகரைச் சேர்ந்த தேவி வயது 24, என்பவர் அவரது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது குடும்பம் கஷ்டத்தில் இருந்து வருகிறது என மயிலபுரத்தைச் சேர்ந்த வியாகம்மாள் மேரியிடம் முறையிட்டுள்ளார், இந்நிலையில் தேவி அவரது 2வயது குழந்தையான தர்ஷனா என்பவரை, மயிலபுரத்தைச் சேர்ந்த ஜான்எட்வர்ட் மற்றும் அற்புதம் ஆகியோரிடமிருந்து ₹30 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு தேவி,வியாகம்மாள் குழந்தையை விற்றுள்ளனர். மேலும் தேவியின், வயிற்றில் வளரும் ஆறுமாத கருவையும், மயிலப்புரத்தைச் சேர்ந்த அமலா பாத்திமா மற்றும் செபஸ்டின் ஆகியோருக்கு விற்க மார்கரெட் தீபா வயது 29 ஒப்பந்தம் செய்திருப்பதாக, திருநெல்வேலி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் திரு.ரமேஷ், அவர்களுக்கு தகவல் கிடைத்தது.பின்னர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் 24.08.2021 அன்று முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் சுத்தமல்லி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. அனிதா,அவர்கள் (பொறுப்பு) அவர்கள் விசாரணை மேற்கொண்டு, சட்டத்திற்கு விரோதமாக குழந்தையை விற்ற வழக்கில் தேவி மற்றும் மார்க்ரெட் தீபா இருவரையும் இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
