
பெண்ணை அவதூறாக பேசி, ஆயுதத்தை காட்டி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழபத்தையை சேர்ந்த, காயத்ரி வயது 28 என்பவர், மேல்பத்தையை சேர்ந்த ஜோசப் பிரவீன் என்பவருடன் பேசி வந்துள்ளார். காயத்ரியிடம் அவரது வீட்டார் பீரவினிடம், பேசுவதை நிறுத்தி விடு என்று சத்தம் போட்டுள்ளனர். இதன் காரணமாக மேல்பத்தையில் இருந்த காயத்ரி அவரது ஊர் கீழபத்தைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் இன்று காயத்ரி அவர் வீட்டின் முன் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த பிரவீன் காயத்ரியை அவதூறாக பேசி, கையால் தாங்கி கத்தியை காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இது குறித்து காயத்ரி களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் திருமதி.தேவி அவர்கள் விசாரணை மேற்கொண்டு காயத்ரியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த பீரவினை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
