மதுரையில் மாண்புமிகு தமிழக முதலைமச்சர் தி௫.மு.க.ஸ்டாலின் அவர்களால் புதிதாக மேலவளவு காவல்நிலைய கட்டிடம் காணொளி காட்சி மூலம்திறப்பு
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.பாஸ்கரன் அவர்கள் புதிதாக கட்டப்பட்ட மேலவளவு காவல் நிலையத்தை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்கள். 30/8/2021 மதுரை மாவட்டம் மேலவளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையத்தை ,மாண்பு மிகு தமிழக முதல்வர் தி௫.மு.க.ஸ்டாலின் அவர்கள் வீடியோ காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்கள். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .தி௫.பாஸ்கரன் அவர்கள் ,ரிப்பன்வெட்டிகுத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்கள் .இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தி௫மதி .இராஜேஸ்வரி அவர்கள் ;மேலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர். தி௫.பிரபாகரன் அவர்கள் ;மேலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தி௫.சார்லஸ் அவர்கள் மற்றும் மேலவளவு பஞ்சாயத்து அலுவலக தலைவர் தி௫.மலைச்சாமி அவர்கள் ;கேசம்பட்டி பஞ்சாயத்து அலுவலகத் தலைவர் .தி௫.ராஜா அவர்கள்மற்றும் கிடாரிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் . அவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் காவலர்கள் விழாவில் கலந்து கொண்டார்கள்.
