Police Recruitment

காஞ்சிபுரம் ஸ்ரீ அத்திவரதர் வைபவத்தில் பாதுகாப்பு பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறப்பாக மேற்கொண்ட காவல்

காஞ்சிபுரம் ஸ்ரீ அத்திவரதர் வைபவத்தில் பாதுகாப்பு பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறப்பாக மேற்கொண்ட காவல் துறையினருக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வழங்கிய பாராட்டுச் சான்றிதழை தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப. அவர்கள் வழங்கி கௌரிவித்தனர்

காஞ்சிபுரத்தில் 01.07.2019 முதல் 17.08.2019 வரை நடைபெற்ற ஸ்ரீ அத்தி வரதர் வைபவத்தில் பாதுகாப்பு பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறப்பாக மேற்கொண்ட காவல்துறையினரைமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பாராட்டி, தனித்தனியாக அனைத்து காவல் துறையினருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. குமார், காவல் துணை கண்காணிப்பாளர் ஆயுதப்படை திரு. மாரியப்பன், பயிற்சி துணை கண்காணிப்பாளர் திரு. ராகவேந்திரா கே. ரவி மற்றும் செல்வி. பூரணி, காவல் ஆய்வாளர்கள் திரு. சம்பத்குமார், திரு. கிருஷ்ணகுமார், திரு. சிசில், திரு. ஞானராஜ், திரு. முத்துப்பாண்டி, திரு. ஹரிகிருஷ்ணன், சார்பு ஆய்வாளர்கள் திரு. வெங்கடேசன், திரு. சதீஷ், திரு. ரமேஷ், திரு. ஹரிகண்ணன், திரு. ராமச்சந்திரன், திரு. விஜயகுமார், திரு. சேகர், திருமதி. சரண்யா, ஆயுதப்படை சார்பு ஆய்வாளர்கள் திரு. வேல்முருகன், திரு இசக்கிமுத்து, சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. சிவராமன், திரு. முத்தையா, திரு. சுகுமார், திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு. நடராஜன், திரு. ஹரிபாலன், திரு. ரமேஷ், திரு. ராஜேந்திரன், திரு ராமச்சந்திரன் மற்றும் திரு. சங்கரலிங்கம் ஆகியோர் உட்பட 343 காவல்துறையினரை பாராட்டி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளார்.

அந்த பாராட்டுச் சான்றிதழ்களை இன்று (14.11.2019) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் காவல்துறையினருக்கு வழங்கி கவுரவித்தார்.

ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published.