


தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு பணியாளர்களுக்கான “முதலமைச்சர் கோப்பை” விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற காவல்துறையினரை பாராட்டி மாவட்ட ஆட்சியர் திருமதி. சாந்தி அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுதாதம் அவர்களும் பரிசுத்தொகை, பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பொறுப்பு வகித்தார். இதில் நமது மாவட்ட காவல்துறையினர் கைப்பந்து போட்டியில் முதலிடம், கபடி போட்டியில் முதலிடமும், மற்றும் தடகள பிரிவில் முதலிடத்தில் பிடித்து அசத்தினர்.
