Police Department News

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் மாற்றுத்திறனாளி சிறுமியை காதலிப்பதாகக் கூறி கடத்தி சென்ற இளைஞர் கைது

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் மாற்றுத்திறனாளி சிறுமியை காதலிப்பதாகக் கூறி கடத்தி சென்ற இளைஞர் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள தொண்டைமான் பட்டியை சேர்ந்தவர் முருகேசன் மகள் சுமதி வயது 16 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வாய் பேச முடியாத காது கேட்காத மாற்றுதிறனாளியாக உள்ளார். இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த மாரி மகன் நாகராஜ் வயது 24 என்பவனும் சுமதியும் காதலித்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 29ம் தேதி சுமதியை நாகராஜ் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுவிட்டார். அப்படி கடத்தி சென்ற சுமதியை சமயபுரத்திற்கு கூட்டி சென்றவர் அங்கேயே தங்க வைத்து இரண்டு நாள் கழித்து 31ம் தேதி நாகராஜ் சுமதியை ஊருக்கு திரும்ப அழைத்து வந்து அவரது வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக சிறுமி சுமதியின் குடும்பத்தினர் சுமதியை திட்டி அடித்துள்ளனர். இதனால் சிறுமி சுமதி கடந்த 2ம் தேதி வீட்டில் தூக்குமாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அந்த சிறுமியை வீட்டில் இருந்தவர்கள் காப்பாற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சுமதி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக சுமதியின் அண்ணன் ஆனந்த் வயது 27 திருவெறும்பூர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.