அரசு பள்ளி மாணவிகளுக்குதலா 15 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் அரசுப் பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 18 ஏழை எளிய மாணவிகளுக்கு “ரெடிட் ஆக்சிஸ் கிராமின் லிமிடெட்” என்ற தொண்டு நிறுவனம் மூலம் தலா 15 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை பெற்று வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தொண்டு நிறுவன அலுவலர்கள் மண்டல மேலாளர் திரு.பசுவராஜ், தருமபுரி பகுதி மேலாளர் திரு.பிரகாஷ், மொரப்பூர் பகுதி மேலாளர் திரு.சம்பத், கிளை மேலாளர்கள் திரு.அபிமன்னன், திரு.சக்திவேல் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.