ஆற்றுப்படுகையில் சேற்றில் சிக்கி தவித்த பசு மாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையிலிருந்து செங்கமடை செல்லும் வழியில் மணிமுத்தாற்றின் கிளை ஆறு ஓடுகிறது. இந்த ஆற்று படுகையில் ஏராளமான மாடுகள் மேய்ச்சலில் இருந்து வந்த நிலையில் ஒரு பசு மாடு தண்ணீர் குடிப்பதற்காக ஆற்றுக்குள் இறங்கிய போது ஆற்று படுகையில் சேற்றில் சிக்கியது. சிக்கித்தவித்த பசுமாடு வெளிவர முடியாமல் தவித்து வந்த நிலையில் அவ்வழியாக வந்த செங்கமடை கிராமத்தை சேர்ந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வந்த தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் திரு. வீரபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு அந்த பசு மாட்டை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். அந்த பசு மாட்டின் உரிமையாளர் யார் என்று கூட தெரியவில்லை இருந்தும் பசு மாட்டை மனித நேயத்துடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.
