
மாயமான 159 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
மதுரை மாநகரில் கடந்த 3 மாதங்களில் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்கும் வகையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன், தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதில் மீனாட்சி கோவில் சரகம்-12, தெற்கு வாசல்-2, திடீர் நகர்- 19, தல்லாகுளம்- 50, செல்லூர்- 26, அண்ணாநகர்-36 உள்பட 159 செல்போன்கள் மீட்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.17 லட்சம் ஆகும்.
மதுரை மாநகரில் தொலைந்து போன செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கலந்து கொண்டு மீட்கப்பட்ட 159 செல்போன்களையும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். துணை கமிஷனர்கள் சாய் பிரனீத் (தெற்கு), வனிதா (தலைமையிடம்), ஆறுமுகசாமி (போக்கு வரத்து) மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்
