
சுந்திர போராட்ட வீரருக்கு எஸ்.பி. மரியாதை
சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கனாரின் 222வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சுந்தரலிங்கம் காலனியில் உள்ள அவரது நினைவு மணிமண்டபத்தில் சுந்தரலிங்கனாரின் சிலைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வின் போது மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன், கடம்பூர் காவல் ஆய்வாளர் சோமசுந்தரம், ஓட்டப்பிடாரம் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜா, புளியம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் கண்ணன் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
