மாவட்ட அளவில் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றி வருவதாக காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை உட்கோட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றியதற்காகவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து உடனடியாக வழக்குகளை முடித்ததற்காகவும், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஊத்தங்கரை குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ரவி, சாமல்பட்டி காவலர் சரவணன், ஊத்தங்கரை காவலர்கள் பிரபாகரன், அதியமான், அன்பழகன், மகேந்திரன், ஆகியோர் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்து வழக்குகளை முடிப்பதாக கூறி கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜாஸ்வி அவர்கள் காவலர்களை பாராட்டி சிறப்பு சான்றிதழ் வழங்கினார்

