
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மாந்தோப்பில் வாலிபர் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சின்ன ஆலேரஅள்ளி கிராம பகுதியில் உள்ள மாந்தோப்பில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதாக மத்தூர் காவல் துறையினர்க்கு தகவல் வந்தது இதையடுத்து மத்தூர் காவல் ஆய்வாளர் முருகன், தலைமையில்
காவல் உதவி ஆய்வாளர்
சிரஞ்சீவிகுமார் ,மற்றும் காவலர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் தற்கொலை செய்துகொண்ட வாலிபர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி சவான் பிஸ்ரா வயது 30 என தெரியவந்தது. மேற்படி இறந்த வாலிபர் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் மத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

