
சென்னையில் நிகழாண்டில் இதுவரை 261 பேர் குண்டர் சட்டத்தில் கைது
இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பு. தொடர் குற்றச்செயல்கள் மற்றும் பெரும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் 1 ம் தேதி முதல் செப்டம்பர் 10 ம் தேதி வரையில் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் சென்னை பெருநகரில் மொத்தம் 261 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 4 ம் தேதி முதல் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 10) வரையிலான ஒரு வாரத்தில் 4 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் கொலை கொள்ளை முயற்சி திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் உயிர் காக்கும் மருந்துகள் போதை மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் பதுக்கி வைத்து விற்பவர்களைத் தொடரந்து கண்காணித்து அவர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
