மேலூர் அருகே வெள்ளலூர் பட்டப்பகலில் கோவில் மணியை திருடியவர் கைது
மேலூர் அருகே வெள்ளலூர் மந்தையில் உள்ள ஸ்ரீ முருகன் கோவிலில் உள்ள 5 கிலோ எடையுள்ள வெங்கல மணியை மேலூரை சேர்ந்த சண்முகராஜ் மகன் செல்வராஜ் வயது 32/2021, என்பவர் மாலை சுமார் 5 மணியளவில் திருடி வரும்போது மணி சத்தம் கேட்கவும் அக்கம் பக்கத்தினர் சந்தேகப்பட்டு எதிரியின் கட்டப்பையை பார்க்கவும் எதிரியின் பையில் மணி இருந்தது அது வெள்ளலூர் மந்தையில் உள்ள முருகன் கோவில் மணி என தெரிய வரவும் மணியை திருடிய செல்வராஜ் மற்றும் மணியுடன் வெள்ளலூர் கிராம மக்கள் கீழவளவு போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர் இது தொடர்பாக வெள்ளலூர் கணக்கப்பிள்ளை வேலு என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கீழவளவு சார்பு ஆய்வாளர் திரு பாலமுருகன் அவர்கள் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது நடவடிக்கை எடுத்தனர் மேலும் வெள்ளலூர் நாட்டு பொதுமக்கள் எங்கள் ஊர் தெய்வம் சக்தி வாய்ந்தது இங்கு உள்ள தெய்வத்தின் பொருளையோ அல்லது வேறு யாருடைய பொருளையோ திருடிச் சென்றால் எங்கள் வெள்ளலூர் நாட்டு எல்லையை தாண்டுவதற்குள் எங்கள் தெய்வம் காண்பித்து கொடுத்துவிடும் என வெள்ளலூர் நாட்டு பொதுமக்கள் தெரிவித்தனர்
