
போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத தொகையை செலுத்த புதிய எளிமையான வழி முறைகள்
மதுரையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த அபராதத்தை எளிதில் செலுத்தும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது.
போக்குவரத்து விதி மீறலுக்காக அபராதம் விதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் தங்களது அபராதத் தொகையினை இது வரையில் வழக்கு பதிவு செய்த காவல்துறை அதிகாரி மற்றும் இ-சேவை மையம் ஆகிய இடங்களில் மட்டும் செலுத்தும் வசதி இருந்து வந்தது, இதன் காரணமாக வாகன ஓட்டிகளுக்கு அபராதத் தொகையினை செலுத்துவதில் பல சிரமங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதில் இருந்த சிரமங்களை நீக்கும் பொருட்டு அபராதத் தொகையினை எளிதாக செலுத்தும் வகையில் கூடுதல் வசதிகள் தற்சமயம் செய்யப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு
Paytm ,
G Pay
G PhonePe
NET BANKING
தமிழகத்தின் எந்த ஒரு பகுதியிலும், பதிவு செய்யப்பட்ட, மோட்டார் வாகன சட்ட வழக்கின் அபராதத் தொகையினை தமிழ்நாட்டிலுள்ள எந்த ஒரு காவல்துறை அதிகாரியிடமும் செலுத்தலாம்.
அறிமுகப்படுத்தப்பட்ட மேற்படி புதிய வசதிகளை பயன்படுத்தி அபராத்தொகையினை எளிதாக செலுத்திக் கொள்ளலாம் என்பது இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கபடுகின்றது.
