Police Recruitment

தூத்துங்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் சமூக நீதி நாளை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் கீழ் கண்டவாறு உறுதி மொழி எடுக்கப்பட்டது.

தூத்துங்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் சமூக நீதி நாளை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் கீழ் கண்டவாறு உறுதி மொழி எடுக்கப்பட்டது.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்கும் ” என்ற அன்பு நெறியும் – “யாதூம் ஊரே யாவரும் கேளீர்” என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாக கடைப்பிடிப்பேன்.

சுய மரியாதை ஆளுமைத் திறனும் – பகுத்தறிவு கூர்மை பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்

சமத்துவம் சகோதரத்துவம் சமதர்மம், ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்து கொள்வேன்.

மானுடப்பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்.

சமூக நீதியே அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன். என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்த உறுதி மொழியில் தூத்துக்குடி ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. ஜி.சந்தீஸ் இ.கா.ப. மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. ஜெயராம், சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு. சிவசங்கரன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து, காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆய்வாளர்கள் திரு. ரமேஷ்பாபு, திரு. ஆழ்வார், மாவட்ட காவல்துறை அலுவலக நிர்வாக அலுவலர்கள் திரு. சுப்பையா, திரு. சங்கரன், திரு. சிவஞானமூர்த்தி, அலுவலக கண்காணிப்பாளர்கள் திரு. பாலசுப்பிரமணியன், திரு. கனேஷப்பெருமாள், திரு. மாரியப்பன், திரு. மாரிமுத்து, திரு. ராபர்ட், திரு. மயில்குமார், திருமதி. சரஸ்வதி, திருமதி. அந்தோணியம்மாள், திரு. அருணாசலம், உதவியாளர்கள். இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.