Police Department News

திருச்சி மாவட்டத்தில் 22 ரவுடிகள் கைது, 4697 மோட்டார் வாகன வழக்கு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்

திருச்சி மாவட்டத்தில் 22 ரவுடிகள் கைது, 4697 மோட்டார் வாகன வழக்கு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்

திருச்சி மாநகரத்தில் நடந்த சில கொலைகளுக்குப் பிறகு, மாநகரக் காவல்
துறையினர் பல ரவுடிகளைக் கைது செய்து வருகின்றனர். அவர்களில் சிலர் திருச்சி மாவட்டத்தில் தஞ்சமடைய வாய்ப்பு உள்ளதால் உயர் அலுவலர்களின்
வழிகாட்டுதலின் பேரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி உத்தரவுப்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 5 காவல் உட்கோட்டங்களிலும் 21.09.2021 மற்றும் 22.09.2021 ஆகிய இரண்டு நாட்கள்
தொடர் வேட்டை நடத்தப்பட்டது.

இதில் ஜீயபுரம் உட்கோட்டத்தை சேர்ந்த 11 ரௌடிகள், திருவெறும்பூர் உட்கோட்டத்தை சேர்ந்த 4 ரவுடிகள், இலால்குடி உட்கோட்டத்தை சேர்ந்த 7 ரவுடிகள், ஆக மொத்தம் 22 ரவுடிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பியும், 2 குற்றவாளிகள் மீது 110 கு.வி.மு.ச -வின் படி பிணைய பத்திரம் பெறுவதற்கு ஆவணம் செய்தும், 14 பிடிக்கட்டளைகள் நிறைவேற்றியும்,

சுற்றி திரிந்த 17 சந்தேக நபர்களை கைது செய்தும், 9 சட்ட விரோத சில்லரை மது விற்பனையாளர்களையும், 4 கஞ்சா விற்பனையாளர்களையும் கைது செய்தும் மற்றும் மேற்கண்ட இரண்டு நாட்களில் 4697 மோட்டார் வாகன வழக்குகளும் பதிவு செய்து திருச்சி மாவட்டத்தில் எந்தவித குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், திருச்சி மாவட்டத்தில் கொலை குற்றத்தில் ஈடுபட்டு தற்பொழுது
பிணையில் இருந்து வந்த 82 குற்றவாளிகளை தணிக்கை செய்தும் மற்றும் கொடுங்குற்றத்தில் ஈடுபட்டு பிணையில் மற்றும் தண்டனை பெற்ற 69 பழைய குற்றவாளிகளை தணிக்கை செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருச்சி மாவட்ட காவல் துறையினர் அதிரடியாக செயல்பட்டு; குற்றவாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி குற்றங்கள் ஏதும் நடைபெறாமலிருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.