போக்குவரத்து விதிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்
மதுரை மாநகர் உயர் திரு காவல் ஆணையாளர் அவர்கள், துணை ஆணையர் போக்குவரத்து திரு ஈஸ்வரன் அவர்கள், மற்றும் போக்குவரத்து உதவி ஆணையர்கள் திரு திருமலை குமார்,திரு மாரியப்பன் அவர்களின் வழிகாட்டுதலின் படி இன்று 26.09.21 கோரிப்பாளையம் சிக்னல் சந்திப்பில் தல்லாகுளம் போக்குவரத்து ஆய்வாளர் திரு V.சுரேஷ், மதிச்சியம் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு பூர்ணகிருஷ்ணன், மாட்டுத்தாவணி சார்பு ஆய்வாளர் திரு செல்லப்பாண்டி, மற்றும் கூடல் புதூர் சார்பு ஆய்வாளர் திரு ஆண்டவர் ஆகியோர் இணைந்து போக்குவரத்து வழக்குகள் மீதான அபராதத்தை எந்தெந்த முறையில் செலுத்தலாம் என்பது பற்றி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.புதிய நடைமுறையில் G Pay, UPI, Pay tm வாயிலாகவும் அபராத தொகையை செலுத்தலாம் என்பது பற்றியும்.எந்த ஊரில் எந்த இடத்தில் பதியப்பட்ட வழக்குகளுக்கும் எந்த அதிகாரியிடமும் அபராதத்தை இவ்வழிமுறையில் செலுத்திக் கொள்ளலாம் என்பது பற்றி பொதுமக்களிடம் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
