மதுரை, பனங்கல் ரோட்டில் மூதாட்டியிடம் நகை பறிப்பு, இரண்டு பெண்கள் கைது, ஒரு பெண் தப்பி ஓட்டம், தப்பியோடியவரை பிடிக்க போலீசார் வலை வீச்சு
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியை சேர்ந்த ராமசாமி மனைவி சரோஜா வயது 60/21, இவர் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார்.இவரது கொழுந்தன் மகள் நந்தினி வயது 14/21, இவர் உடல் நலமில்லாமல் மதுரை மீனாட்சி மிஷின் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் கடந்த 23 ம் தேதி இவரை பார்த்து நலம் விசாரித்து விட்டு மாலை 3.30 மணியளவில் ஊருக்கு செல்வதற்காக ஆட்டோவில் ஏறி மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனை அருகில் வந்து இறங்கி நடந்து வரும் போது அதே ஆட்டோவில் வந்த 3 பெண்கள் இவரை வழி மறித்து இரண்டு பேர் இவரது கைகளை பிடித்து கொள்ள மற்றொருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 அரை பவுன் தங்கச்செயினை பறித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தினர், உடனே சுதாரித்துக் கொண்டு சத்தம் போடவும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த gr 1, காவலர் திரு. அய்யனார் அவர்கள், மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை விரட்டி பிடித்தனர் அவர்களில் ஒருவர் தப்பியோடி விட்டார் மற்ற இருவரும் பிடிபட்டனர் இவர்களை பிடிக்க உதவியாக இருந்த ராஜசேகர், பூபதி ஆகியோருடன் காவல்நிலையம் வந்து புகார் அளித்தனர், புகாரை பெற்றுக்கொண்டு விசாரணை செய்ததில் கையும் களவுமாக பிடிபட்டவர்கள் கோவில்பட்டியை சேர்ந்த ஆனந்த் மனைவி பூங்கொடி வயது 41/21, எனவும் மற்றொருவர் கோவில்பட்டியை சேர்ந்த மணி மனைவி நந்தினி வயது 25/21, எனவும் தெரிய வந்தது, தப்பியோடியவர் மருதுபாண்டி மனைவி மீனா எனவும் தெரிய வந்தது, தப்பி ஓடியவரை போலீசார் தேடிவருகின்றனர் பிடிபட்ட இருவரையும் கைது செய்து ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. K.மகேந்திரன் அவர்கள் வழக்கு பதிவு செய்து ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் விசாரணை செய்து நீதி மன்ற காவலுக்கு உட்படுத்தினர்.